பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

1. வழிகாட்டும் விளையாட்டு


வழிகள் தரும் மொழிகள்

வாழ்க்கையை சுவையாக ஆக்கிக் காட்டத்தான் விளையாட்டுக்கள் உலகில் மலர்ந்திருக்கின்றனவே தவிர, சுமையாக ஏற்றிக் காட்ட அல்ல என்ற உண்மையை ஒத்துக் கொள்ளும் வரை, உணர்ந்து செயல்படும் வரை, உற்ற இன்பத்தையோ, உரிய ஆனந்த நிலையையோ நாம் என்றுமே அடைந்துவிட முடியாது.

`யாதும் ஊரே யாவரும் கேளிர்',` தன்னைப் போல் பிறரையும் கேசி'`பகிர்ந்து உண்டால் பசியும் அடங்கும்' `ஒற்றுமையே வலிமையாம்' `அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்'`எண்ணித் துணிக கருமம், `முயற்சி திருவினையாக்கும்’ கல்லது கினைத்தால் நன்மையே கிடைக்கும்.'

மேலே காணும் வாழ்க்கை நெறிகள் ஆண்டாண்டு காலமாக அனைவராலும் பேசப்படுகின்ற பழமொழிகள் ஆகும். மக்கள் எல்லோரும் மாபெரும் இன்பச்