பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. பிள்ளைகளைப் பிடியுங்கள்!


மழலையின் மகிமை நாணலைப் போல் வளையவும், கஞ்சை நிலம் போல் விளையவும், நற்சுவைச் சுனையாக உதவவும், பொற்கலை உருவமாகத் திகழவும், பிஞ்சு மனங்களால்தான் முடியும். உடலால் காணல் போல் வளைந்து, உண்மை களைக் கல்லின்மேல் எழுத்தாக ஏற்றுக்கொண்டு, பசு மரத்தாணி போலப் பதித்து, நேச மொழி நேயத்துடன் பழகும் பண்பு, கொஞ்சு மொழி பயிலும் குழந்தை களிடமே உண்டு.

'இன்றைய குழந்தைகள், நாளைய குழந்தைகளின் பெற்றேர்கள்’ என்று ஒரு பொன்மொழி உண்டு. அதைப் போலவே இன்றைய தலைவர்களும், தள நாயகர்களும், தருமத்தின் காவலர்களும் நேற்றைய குழந்தைகளாக விளங்கியவர்களே! அதனைத்தான் 'தொட்டில் பழக்கம்’ என்று கோடிட்டுக் காட்டி விளங்க வைத்தனர் பெரியோர்கள்.