பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
130

போட்டி நடப்பதற்கு முன்

தேர்வு கடந்துவிட்டது. போட்டிகளும் ஆரம்ப நிலை யில் இருக்கின்றன. அதற்கு முன்னே நடக்கும் அணி வகுப்பும் மதச் சடங்கும் மிகப் பயங்கரமானவையாகும்.

40 அடி உயரமுள்ள தலைமைக் கடவுளான சீயஸ். பீடத்தின் முன்னே போட்டியாளர்களின் பெற்ருேர்கள், உறவினர்கள் அதிகாரிகள், அத்தனை பேரும் பயபக்தி யுடன் நிற்க, பன்றி ஒன்று பீடத்தில் பலியிடப்படும். அந்தப் பன்றி ரத்தத்தைத் தொட்டு வீரர்கள், பந்தய அதிகாரிகள் சபதம் செய்வார்கள். உறுதி கூறுவார்கள். எப்படி?

போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக காங்கள் எந்த விதமான சூழ்நிலைகளிலும்குறுக்கு வழிகளிலோ, கீழ்த்தரமான நடவடிக்கைகளிலோ எப்பொழுதும் ஈடுபடமாட்டோம்" என்று உறுதி கூறுகிருேம்.

போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் உள்ள போட்டி விதிகள், பரிசீலனை, பதிைேரு மாதப் பயிற்சி, அதில் தேர்வு, அதன் பின்னர் ஆண்டவன் முன்னே இரத்தத்தைத் தொட்டு சத்தியம், சபதம், அதற்குப் பிறகு காவல் காத்து கின்று பந்தயங்களில் பழுது நேரா வண்ணம் பாதுகாக்கும் அதிகாரிகள், மேற் பார்வையாளர்கள்.

இவர்களையும் மீறி அங்கே எதுவும் நடக்கக் கூடாது என்பதுதானே முறை. அதைத்தானே இந்த உலகமும் உள்ள மும் எதிர்பார்க்கிறது. அதுதானே பகுத்தறிவு உள்ளவர்கள் பின் பற்றும் பண்பான ஒழுக்க முறை!