பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
129


வேண்டும். திருமணம் ஆகாதவனுக, குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெருதவனுகவும் அவன் இருக்க வேண்டும்.

அவன் தன் பெயர், பரம்பரை பற்றிய விவரங்கள், தன்னைப் பற்றிய குறிப்பு, சிறப்பு, பயிற்சி, முயற்சி பற்றிய விளக்கங்களுடன் "எல்லிஸ் (Elis) என்ற இடத்தில் இருந்த தலைமைக் கழகத்திற்கு விண்ணப். பித்துக் கொள்ள வேண்டும். அந்த விண்ணப்பத்தைப் பற்றி முழு உண்மையைத் தெரிந்து கொள்ள பத்து. பேர் அடங்கிய அதிகாரிகள் குழு ஒன்று, அவன் ஊருக்கு வந்து, ஐயம் தீர விசாரித்து, அவன் கூறிய தனைத்தும் உண்மைதான் என்று தலைமைக் கழகத் திற்குப் பரிந்துரைக்கும்.

இவ்வாறு கடுமையான பரிசீலனைக்குப் பிறகு, பரிசுத்தமானவர்கள், பயிற்சி மிக்கப் பண்பாளர்கள் என்ற வீரர்களை எல்லாம் வரச் செய்து, எல்லிஸ் என்ற இடத்தில் ஒரு மாதம் கடுமையான பயிற்சிகளை அளிப்பார்கள். பயிற்சிகள் கடுமை என்ருலும், உணவு வகையோ வெறும் பழங்கள், தண்ணிர், கொஞ்ச காலத்திற்குப் பிறகு கறியும் மதுவும் தரப்பட்டன.

ஒரு மாத கடுமையான பயிற்சிகள் எல்லாம், ஒலிம்பிக் அதிகாரிகளின் கண்காணிப்பிலும், கட்டுப் பாட்டிலும் கடக்கும். அவர்களில் நல்ல திறமைசாலிகளை, வலிமை மிக்கவர்களை அதிகாரிகள் இறுதியாகத் தேர்ந் தெடுத்து ஒலிம்பிக் பந்தயத்திற்குள் பங்கு பெற, அனுமதி அளிப்பார்கள். வி. விரு-9