பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134

 500 வீரர்களுடன் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்டான் நீரோ. பங்கு பெற்ற அத்தனைப் போட்டி களிலும் அவனே முதல் பரிசு பெற்று வீரனைன். பாட்டுப் போட்டியில் தொடங்கி, குத்துச் சண்டை முடி வாக, எல்லாப் போட்டியிலும் அவனே வெற்றி வீரன்.

தேரோட்டப் போட்டியிலும் அவனே வெற்றி விரன்! எப்படி? தேரோட்டப் போட்டியில் கலந்து கொள்ள தேருடன் வீரர்கள் வந்தனர். போட்டி தொடங் கியது. சக்ரவர்த்தியின் தேர், முன்னே பாய்ந்து செல்கிறது. மற்றவர்களின் தேர்கள் பின்னலேதான் வந்து கொண்டிருக்கின்றன.

``தடார்” என்று ஒரு சத்தம். தேரிலிருந்து நீரோ துரக்கி எறியப்பட்டான். மற்றவர்களுக்கு என்ன? வேக மாகத் தேரை ஓட்டிக் கொண்டு போக வேண்டியது தானே! எல்லோருடைய தேர்களும் நின்றுவிட்டன.

கீழே விழுந்த மன்னன், எழுந்து, தன்னைத் துடைத்துக்கொண்டு, தேரிலேறி, ஒட்டிச் சென்று வெற்றி எல்2லக் கோட்டை அடையும் வரையும் அத் தனத்தேர்களும் சக்கரவர்த்தியின் தேருக்குப் பின்னு லேயேதான் கின்றன. சென்றன. முடிவு-நீரோதான் வெற்றி வீரன்.

இவ்வாறு, தன்னுடைய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தனைப் போட்டிகளிலும் வெற்றி பெற்ருன் நீரோ முடிவு என்ன? அவனுக்குப் பின்னே ஒலிம்பிக் பந்தயங்களே அழிந்து போயின.

ஆகவே, கிறிஸ்து பிறப்பதற்கு முன்னே எத்த னையோ நூற்ருண்டுகளுக்கு முன்னேயே, இந்த ஊழல் தலைவிரித்தாடி இருக்கிறது.