பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
135

திறமை மிக்கவர்கள், தெய்வ பக்திகிறைந்தவர்கள், வலிமை உள்ளவர்கள், நல்ல மனம் கொண்டவர் களிடையே இந்த ஊழல் நிகழ்ந்து நடமாடி இருக்கிறது என்ருல், கல்லா மாந்தரிடைபே கண்மூடி விளையாடக் கேட்கவா வேண்டும்!

முயற்சியில் ஈடுபடாத சோம்பேறி குறுக்கு வழி களிலும் இருட்டு வழியிலும் திருட்டு முறையிலும்தானே போயாக வேண்டும்?

ஊழலின் வயது ஊழலே உன் வயதென்ன? என்ற கேள்விக்கு விடைகாண முயன்றவர்கள் எல்லாம் தோல்வியேதான் அடைந்திருக்கின்றனர். ஏசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் பெற்றது 30 வெள்ளிக் காசுகள்தானே. மனிதனுக்கு என்று சுயநலப் பண்பு தலைதுாக்கத் தொடங்கியதோ, பணமும் பதவியும், பவிசும், பரிசும், அதிகாரமும் முக்கியத்துவம் என்ற உணர்வு வரத் தொடங்கியதோ அன்று பிறந்ததுதான் இந்த ஊழல்.

உலக வாழ்க்கையை ஆராய்ந்தாலும், ஒப்பற்ற பண்புக் களமாக விளங்கிய ஒலிம்பிக் பந்தயங்களை ஆய்ந்தாலும், ஆங்காங்கே தலைதுாக்கி நிற்பது ஊழல் என்ருல் என்று ஒழியும் இந்த ஊழல் என்ருல், இந்த உலகம் என்று திருந்துமோ அன்றுதான் என்று ஒரு பதிலைக் கூறி திருப்தியடைகிருேம். வேறென்ன செய்ய முடியும்?

விளையாட்டு உலகம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகம். தீயவை அகற்றி, துரயவை போற்றி வாழ் கின்ற நேர் வழியை நல்குகின்ற உலகம்.