பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
13


நோக்கித் தமது பொன்னை கேரத்தைப் பயன்படுத் திச் செயலாற்றும் கோக்கத்துடனேதான் எல்லா மக்களும் முயல்கின்றனர். முனைந்து வாழ்கின்றனர்.

மக்களின உண்மையான நோக்கம் பணமாக இருக்கலாம். பதவியாக இருக்கலாம். நிலமாக, இருக்கலாம். அவைகள் அந்தந்த மனதுக்கு கிறைவைத் தருகின்றன. எனவே நோக்கமுள்ள விளையாட்டின் இலக்கைப் போலவே மனிதர்களும் வாழ்க்கையில் தங்களுக்கென ஒரு இலக்கை அமைத்துக் கொண்டு, குறிகோக்கி அதைப் பார்த்தே வாழ்க்கையை செலுத்து கின்றனர். அதனுல்தான் குறிக்கோள் இல்லாத மனிதனும் கோட்பாடு இல்லாத சமுதாயமும குரங் குக்குச் சமம் என்று ஒரு பழமொழி கூறும்.

கோக்கம் மட்டும் இருந்தால் போதுமா? அதற்குரிய நுணுக்கம் வேண்டாமா? ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு ஆடுகள எல்லே இருப்பது போல, ஆடுதற். குரிய கேரக் கட்டுப்பாடு அமைந்திருப்பது போல, இலக்குவின் இடைவெளியானது இணைந்திருப்பது போல, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி திறமையும், நுணுக்கமும் இருக்கவேண்டும் என்ற விதி முறைகளும் வழி முறைகளும் உண்டு.

அதைப் போலவே, வாழ்வில் நோக்கத்தை வைத்துக்கொண்டு நுணுக்கம் ஏதும் இல்லாமல் இருந்தால், காரியம் வெற்றியாக முடியுமா? ஆகவே, எந்த விளையாட்டிலும் வெற்றி பெறுவதற்குத் தனித் திறமை அமைய வேண்டியிருப்பது போலவே, எந்த ஒரு காரியத்திற்கும் அதற்குரிய தனித்திறமையும் நுணுக்கமும் சிறப்பாக அமையவேண்டியது. மிகவும் அவசியமாகும்.