பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
14.

அதற்குரிய முறையான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறை நிச்சயம் வேண்டும். ஒழுக்க உமானது மனதாலும் செயலாலும் கடைப்பிடிக்க வேண் டியதாகும். அந்த நிலையினை விளையாட்டே கட்டுப் பாட்டுடன் வளர்க்கின்றது. ஒழுக்கமில்லாமல் பண்பாடு குறைவாக நடந்து கொள்கின்ற ஒருவன், ஆடுகளத்தி னுள்ளே அப்பொழுதே தண்டிக்கப்படுகின் ருன், அது போலவே, வாழ்வில் பண்பாடில்லாமல் வாழ்கின்ற ஒருவன் அதே போல்தான் தண்டனை பெறவேண்டும் என்ற ஓர் நினைவாய் கின்று, விளையாட்டு வழிகாட்டு கிறது.

திறமைக்குப் பெருமை

        யாராயிருந்தாலும் ஆட்டத்தில் திறமையுள்ள வரையே மற்றவர்கள் ஆதரிப்பதும், அனுசரிப்பதும், அன்புருகப் பாராட்டுவதும் நாம் அன்ருடம் காண்கின்ற காட்சியா கும். அங்கே சாதியும், மதமும், சமயமும் எழை-செல்வ வேறுபாடும், பதவி பவிசு போன்ற சூழ் .கிலைகளும் விளையாட்டில் தலைகாட்டுவதேயில்லை. மீறி அவ்வாறு நடந்தால், அது விபரீதமாகவே முடிந்து போகும். இடையிலே மடிந்து போகும்.

எனவே, திறமைக்குத் தலைவணங்கிச் செல்லும் இணக்கமும், விளையாட்டு என்றதும், வருகின்றவர்களை வரவேற்கும் பண்பாடும் ஒருவனுக்குப் பழக்கமாகவும், பயிற்சியாகவும் மாறிவிடுகின்றது. எத்தகைய நிலை யிலும் ஆத்திரமடையாத பண்பை வளர்க்கவே விளையாட்டு முயல்கிறது.

பழக்கம் என்பது கன்மை, தீமை இரண்டிற்கும். உண்டு. பிறர் போற்ற வாழ வேண்டும் என்ருல், பெருமை பெற உலவ வேண்டும் என்ருல் நல்ல .