பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



25


ஆங்கில இலககியத்தின் அழகான மணி மண்டப மாகத் திகழ்பவர் ஷேக்ஸ்பியர் அவர்கள். எடுப்பும் ஏற்றமும் மிக்க அந்தக் கவிஞர், உலக வாழ்க்கையைக் குறிக்க, இன்னும் ஒருபடி மேலே சென்று உலகம் என்பது நாடக மேடை போன்றது, அதில் வாழும் மக்களனைவரும் நடிகர்களே' என்று பாடிவிட்டுப் போயிருக்கிருர்.

அவர் கூற்றின்படி உலகம் ஒரு நாடக மேடை யானால், உலகில் வாழும் மக்கள் எல்லாம். ஏதோ ஒரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களானல், அவ்வாறு நடிக்க முடியும் நடிகர்களுக்கு முன்கூட்டியே நடிக்க, நான்ருகப் பழகிப் பார்த்துப் பயிற்சி செய்யக் கூடிய ஒத்திகை இடம் என்பது ஒன்று அவசியமல்லவா!

ஒத்திகையில்லாத நடிப்பும், பண்படாத பயிற்சியும் சிறந்த நடிப்பையோ, சிறப்பான வெற்றியையோ அளிக்காது-அளித்தாலும் அது சீராக அமையாது.

ஆகவே உலக மேடையில் உயர்ந்த வாழ்வெனும் உன்னத கடிப்பை கடித்துக் காட்டுவதற்கு உபயோக முள்ள ஒரு ஒத்திகை மன்றம்-ஒரு பயிற்சிக்கூடம் தேவையல்லவா! அவ்வாறென்ருல் அத்த ஒத்திகை மன்றம் எதுவாக இருக்க முடியும்?

தானம் தரும் மைதானம்

அதுதான் ஆடுகளம்-விளையாடும் மைதானம்.

ஆடுகளத்திற்கென்ன அ த் த னை மகிமையா என்ருல், ஆமாம் என்று தலைநிமிர்ந்தே கூறலாம். அத்தனை அற்புத சக்திக்கு அங்கே என்ன இருக்கிறது