பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

'


தத்துவம் கூறும்! உன்னுடைய கடமையைச் செய். பலனை எதிர்பாராதே! என்ற அந்த தத்துவத்தை வாழ்க்கையில் ஈடுபடுத்துவதற்கு முன், அனுபவத்தில் இட்டுப் பார்க்கக்கூடிய இடமாக விளையாட்டுத்திடல் தான் இருக்கிறது.

பிறர்க்கின்னா செய்யாமல், தன் வழியில், தன் நெறியில், தன் முயற்சியில் தளர்ந்து போகாமல், விடாமுயற்சியோடும், வெற்றி பெறுவோம் என்ற கம்பிக்கை யோடும் இறுதிவரை, உறுதியான முறையில், தன் வழியில், தன் நெறியில் தன் முயற்சியில், தளர்ந்து. போகாமல் விடாமுயற்சியோடும், வெற்றி பெறுவோம் என்ற தைரியத்தோடும் ஒற்றுமையுடன் போராடி மகிழ வேண்டும் என்பதே விளையாட்டுத் தத்துவ மாகும்.

'தோல்விதான் வெற்றியின் படிகள்' என்பாரும் உண்டு. அதனைச் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. வெற்றி பெறும் பொழுது வெறி கொள்ளாமலும், தோல்வியைத் தழுவும் பொழுது துவண்டு போகாமலும் எப்படி வாழ முடியும்? விளையாட்டுக் களத்திலே அந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் பொழுதுதான் இத்தகைய அரிய மனநிலை உண்டாகும். அந்த மன உரமும் தரமும் விளையாட்டாலேயே பெறமுடியும். இயற்கையான வாழ்வு

இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ வேண்டும் என்ற சூழ்நிலையில், திறந்த வெளியில், பறந்து திரியும் துய காற்றைப் பருகி, பொன்னொளி பரப்பும் பரிதி வெப்பத்தில் தேகத்தைத் தழுவி, 'அன்பே இன்பம்’ பண்பே சொந்தம்’ என்ற இனிய நினைவுகளுடன்