பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45

வருகின்றன. அதற்காக உண்ணும் பொழுதும், உறங்கும் பொழுதும் கவலைகளையே சுமந்து கொண்டு கூனிக் குறுகி, நாணி நடுங்கி வாழவேண்டும் என்பது அவசியம் இல்லையே!

இருபது வயதைக் கடந்து விட்டாலே ஒரு மாதிரியான எண்ணம், திருமணம் நடந்துவிட்டாலோ ஒரு பெரிய மனித நினைப்பு. பிள்ளை குட்டிகள் என்றாலோ, 'பெரிய குடும்பஸ்தர்' என்று எண்ணி, தன்னையே மறந்து விடுகின்ற திகைப்பு.

வாழ்வில் வருகின்ற கவலைகள், குழப்பங்கள் குடும்பப் பொறுப்புகள், கூட்டுகின்ற தவிப்புகள் எல்லாமே என்றும் நம் கூடவே வருவனதான். நாம் என்னதான் முயன்றாலும் நம்மால் தப்பவே முடியாது.. நாமொன்று நினைக்க நடப்பது ஒன்றாகி, அதுவும் வேறாகியே முடியும்.

ஆகவே கவலைகளைக் களையவும், அவற்றின் கடுமைகளைக் குறைக்கவும் கலகலப்பானநினைவுகளுடன் களிப்பாக வாழவும், வழி வகுக்கின்ற எளிய இனிய அமைப்பு, விளையாட்டுக்கள் தான் என்பதை ஏனோ நம் நாட்டவர் ஏற்க மறுக்கின்றனர் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது.

காட்டிலும், கழனிகளிலும், கூலி வேலைகளிலும் காலை முதல் மாலைவரை உழைக்கின்ற கிராம மக்களில், குழந்தைகள் முதல் கிழவர்கள்வர இரவு நேரங்களில் விளையாடிக் களிப்பதையும், பொழுதுப் போக்கி மகிழ்வதையும் இன்றும் நாம் காண்கிறோம்.

சடுகுடு ஆட்டம், பாரி ஆட்டம், சிலம்ப விளையாட்டு போன்ற விளையாட்டுக்கள், வேலை