பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
97

பங்கு பெறும் தன் நாட்டு வீரர்களின் வெற்றியைக் கண்டு களிக்கவும், தோற்றோடும் நீக்ரோக்களின் தொங்கிய முகங்களைக் கண்டு எள்ளி நகைக்கவும், அணி வகுத்து கிற்கும் தமது மனிதப் படை துழ, ஹிட்லரும் அரங்கம் வந்து அமர்ந்தான்.

விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி முடிவுகள் வரத் தொடங்கின. அமெரிக்க நீக்ரோ ஜெசி ஒவன்ஸ்’. என்ற வீரரின் ஆற்றலுக்கு முன்னே ஹிட்லரின் ஆரிய வீரர்கள் திணறினர். திண்டாடித் தோற்றனர். ஆரிய வீரர்களின் வீரியம் குறைந்து ஆதவன் முன் அகல் விளக்காக கின்றனர்.

100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை. 200 மீட்டர் ஒட்டத்தில் புதிய சாதனை. நீளத் தாண்டும் போட்டியில் இமாலய சாதனை. ஆமாம். அன்றிலிருந்து 27 ஆண்டுகள் வரை யாராலுமே தாண்ட முடியாத அளவுக்கு 26 அடி 5.5.16 அங்குலம் தாண்டி புதிய சாதனையைச் சரித்திரத்தில் பொறித்ததைக் கண்ட சர்வாதிகாரி, தொங்கிய முகத்துடன் தொய்ந்த கடை யுடன் பந்தய அரங்கத்தை விட்டு பாதியிலேயே பின் வழியே ஒடிப் போகும் அளவுக்கு வீறும் வீரமும் பெற்று விளங்கிய ஜெசி ஒவன்ஸ் போலவே, எத்தனையோ நீக்ரோ வீரர்கள் அன்றும் இன்றும் உலகில் விளங்குகின்றனர்.

நீக்ரோ வீரர் ஜெசி ஒவன்சின் 27 ஆண்டு சாதனையை முறியடித்து 27 அடிக்குமேல் தாண்டிய புகழைத் தட்டிக் கொண்டு போன வீரரும் ரால்ப் பாஸ்டன் என்னும் அமெரிக்க நீக்ரோதான். இதற்குமேல் இனி யாராலும் புதிய சாதனையை ஏற்படுத்த முடியாதுஎன்று உலகத்தினரே உறுதியாகக் கூறும் அளவுக்கு வி. விரு-7