பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


எறிபரப்பிற்குள்ளே விழுகின்ற எறிதான் சரியான தாகும்.

எறியப்பட்ட வேலானது இடைப்பட்ட பகுதி யிலே முறிந்துபோனால், அது எறிந்தவர் தவறல்ல. ஆகவே, மீண்டும் அவருக்கு ஒர் வாய்ப்புத் தர வேண்டும்.

ஆகவே, எறியும் நிகழ்ச்சிகளில் வட்டத்திற் குள்ளேயிருந்து உடலாளர் எறியும்போது, விதிகளை முறையோடு பின்பற்றுகின்றாரா என்பதை ஒரு நடுவரும், எறியப்பட்ட வேல் விழுந்த இடத்தைப் பார்க்க ஒருவரும், அளந்து குறித்துக்கொள்ள இருவரும் என்ற முறையில் நான்கு துணை நடுவர்கள் இருந்தால் எளிதாகப் பணியாற்றலாம்.

எறி நிகழ்ச்சிகளில் சமமான தூரம் எறிந்து சமநிலை வந்துவிட்டால், கீழ்கண்டவாறு தீர்க்கலாம்.

யார் அதிக தூரம் எறிந்திருக்கின்றாரோ, அவரே வெற்றி பெற்றவர் ஆவர்.

இதில் சிக்கல் எழுந்தால், அவர்களுடைய இரண்டாவது சிறந்த அடுத்த எறிந்த தூரத்தைப் பார்த்து, யார் அதில் அதிகம் எறிந்திருக்கின்றாரோ, அவரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்க வேண்டும்.

இன்னும் சிக்கல் வந்தால், அதற்கடுத்துள்ளஎறியும் வாய்ப்பில் உள்ள அதிக தூரத்தை அறிந்து முடிவு செய்ய வேண்டும்.