பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



124 []

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


5.அட்டை (Pad) ஒவ்வொன்றிலும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், அதன் பின்னே, அந்தந்த நிகழ்ச்சிக் குரிய விதிகள் எழுதப்பெற்ற தாள்.

6.வெற்றி எண் குறிப்பாளருக்கு (Scorer) ஒரு மேசை, 7.வெற்றி கேடயங்களையும், பரிசுப் பொருட் களையும் வைக்கின்ற மேசைகள்.

8.உடலாளர்கள் உபயோகத்திற்குரிய விரிப்புகள், கம்பளிகள்.

9.உடலாளர்கள் (சமயத்திற்கு) ஒய்வு எடுத்துக் கொள்ளத் தேவைப்படும்படியான நீண்ட பெஞ்சுகள்.

10.ஒட்டப் பந்தயத்தில் ஒட்ட வரிசை முறையில் 'ஒடும் பாதை'யைத் தேர்ந்தெடுக்கக் குலுக்கல் மூலமாக எடுக்க உதவும் எண்கள் (அதை அட்டையிலும் எழுதி வட்டமாக வெட்டி எடுக்க லாம், அல்லது கேரம் ஆட்டத்திற்குப் பயன்படும் வடிவமான மரக்காய்களின் மேல் எழுதியும் உபயோகப்படுத்தலாம்.)

11.விதிகளின் புத்தகம்.

12.அதிகாரிகள் அணிகின்ற அடையாள அட்டை (Badge).

13.முதலுதவிப் பெட்டி முதலியன. மேலே கூறியவைகள் அனைத்தும், ஆங்காங்கே பத்திரமாக வைக்கப் பெற்றிருக்கின்றனவா என்று கண் காணிக்கின்ற பொழுதே விழா நிகழ்ச்சிகளை