எஸ். நவராஜ் செல்லையா 口 67
தரையில் அமர்ந்து விடுமாறு கூறி, நிலைமையை சரிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பொறுப்புகளை உடைய உதவியாளர்களால்தான் ஒட்டப்பந்தய நிகழ்ச்சிகள் விரைவாகவும், வெற்றிகரமாகவும் நடந்தேறும்.
4. துணை நடுவர்கள் (Umpires) முடிவெடுப்பதில் எந்தவிதமான அதிகாரம் இல்லாமல் இருந்தாலும்,துணை நடுவர்கள் நடுவருக்கு உதவியாளர்களாகவே துணை புரிகின்றார்கள். ஒட்டப் பந்தயப் போட்டிகளை அருகிருந்து கவனிக்கின்றார்கள். பந்தயப் பாதையின் வளைவு போன்ற பகுதிகளில் நின்று ஒடுவோரைக் கண்காணிக்கின்றார்கள்.
தவறு நடக்கின்ற பொழுது அதனை நடுவருக்குச் சுட்டிக்காட்டவும், தொடரோட்டம் போன்ற சூழ்நிலைகளில் ஒட்டக்காரர்கள் குறுந்தடி மாற்றிக்கொள்ளும் பகுதிகளில் (Take over Zones) நின்று, தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கின்றனர்.
நேரான ஒடும் பாதையிலும் சரி, வளைவுப் பகுதியிலும் சரி, கோட்டைக் கடந்து ஓடாமல் உடலாளர்களைப் பார்த்துக்கொள்வதோடு, எதிராளியை இடப்புறமாக முந்தாமல், வலது கைப் புறமாக முந்திச்செல்கின்றனரா என்பதையும், (2 கெஜ துரத்திற்கு அப்பால் ஒடி யாரும் இல்லாமல் இருந்தால், ஒருவரை எந்தப் புறத்திலேனும் தாண்டி முந்திக் கொண்டு ஒடலாம்) எந்த உடலாளராவது