பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



68 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


எதிராளிக்கு இடங்கெடுக்காமல் அங்குமிங்கும் ஒடி ஒடவிடாதவாறு பாதையில் தடை செய்கின்றாரா என்பதையும் கண்காணித்து நடுவரிடம் உடனே கூறிவிட வேண்டும்.

5. வட்டக் குறிப்பாளர்கள் 800 மீட்டர், 1500 மீட்டர் போன்ற நெட் டோட்டப் பந்தயங்களில் பங்கெடுத்து ஒடுகின்ற ஒட்டக்காரர்கள், ஒடும் தூரத்தின் வட்டங்களைக் (Rounds) கணக்கெடுத்துக் கொண்டு, எத்தனை வட்டங்கள் இன்னும் ஒட வேண்டும் என்பதைக் கூறிக்கொண்டே வந்து, கடைசி வட்டத்திற்கு அவர் களுக்கு மணி ஒலி மூலமாகவோ, சத்தத்தின் மூல மாகவோ கூற வேண்டுவது இவர்கள் பணியாகும்.

ஒவ்வொரு வட்டக் குறிப்பாளரும் 4 ஒட்டக் காரர்களுக்குமேல் வட்டக் குறிப்புக்களை எழுதக் கூடாது. அந்த ஒட்டக்காரர்களையும் யாரென்று நடுவரே தீர்மானிப்பார். இவர்களைத்தான் நான் குறிப்பேன் என்று யாரும் பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

குறிப்பாளர்களுக்குக் குறிப்பெழுதப் பயன்படு வது போல, குறிப்பட்டையும் [lap scoring pad]கொடுக்கப்பெறும், அந்த அட்டையில், அவர்கள் ஒடிய வட்டத்தின் எண்ணிக்கையும், வட்டத்தைச் சுற்றுவதற்காக மேற்கொண்ட நேரத்தையும் குறிக்க வேண்டும்.

நெட்டோட்டங்களில் அடிக்கடி எவர் எவர் மொத்த வட்டங்களையும் சுற்றினார்கள் என்பதில்