பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. போட்டிகளை நடத்தும் முறைகள்

அ. உடலாளர்களுக்கு சில குறிப்புக்கள்

ஒட்டப் போட்டிகளில்: இறுதிப் போட்டிகளில் பங்கு பெறுதற்கும் தகுதி பெறுவதற்கும் முன்னர், முதல் கட்டப் போட்டிகளில் (Heats) கலந்து கொண்டு அவைகளிலே முதன்மையான இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஒட்டப் பந்தயங்களில், அதிக வீரர்களை ஒரே சமயத்தில் ஒட விட முடியாதாகையால், அவர்களை ஆறு ஆறு பேராகப் பிரித்துத்தான் ஒட விடுவார்கள். அவர்களிலே முதலாவதாக வரும் இருவரையோ அல்லது மூவரையோ (தேவைக்கேற்றபடி) தேர்ந் தெடுத்து, இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

ஆறு பேர்களாக ஏன் பிரிக்க வேண்டும் என்றால், ஒடும் பந்தயப் பாதைகள் மொத்தமே ஆறுதான் இருக்கும். அதை அனுசரித்துத்தான் பிரிக்கின்றனர்.

அவ்வாறு பிரிக்கும் பணியை, அந்தந்த விளை யாட்டு விழாவை நடத்தும் குழுவினரே மேற்கொள்ள வேண்டும்.