பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



88

விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


முதலாவதாக வென்றக் குழுவிற்கு வெற்றி எண் 5. இரண்டாவதாக வந்த குழுவுக்கு வெற்றி எண் 2.

மூன்று குழுக்கள் பங்கு பெற்றால், 7, 4, 2 என்ற முறையில் வெற்றி எண் வழங்கப்படும்.

ஆறு குழுக்கள் (Teams) பங்கு பெற்றால், 7, 5, 4,3, 2, 1 என்ற முறையில் வெற்றி எண்கள் வழங்கப் பெறும்.

(ஆ) நடுவர்களுக்கு சில குறிப்புக்கள்

முதலில் ஒட்டப் பந்தயங்கள் நடத்துவதற்குரிய விதி முறையைக் காண்போம்.

விரைவோட்டம்: (Sprint) விரைவோட்டம் என்பதில் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் என்று குறுகிய துரத்திற்குள்ளேயே ஒடப் பெறுவதால் போட்டி அதிகமாகவே இருக்கும்.

முடிவெல்லைக் கோட்டை நெருங்கும்போது, ஏறத்தாழ எல்லோரும் சேர்ந்தாற்போலவே ஒடி முடித்தது போலவே வேடிக்கை பார்ப்பவர்களுக்கு தோன்றும். நடுவர்களுக்கும் தெரியும். கண்டு பிடிப்பதும் மிகவும் சிரமமான காரியந்தான். ஆகவே, நடுவர்கள் மிகவும் கூர்மையான பார்வையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்.

ஒடி வருகின்ற வேகத்தைப் பார்த்த உடனேயே, இவன்தான் முதலாவதாக வந்தவன் என்று முடிவு கட்டிவிடக்கூடாது. அவன் ஓடிவந்து கோட்டைக் கடக்கின்றானா, பிடித்திருக்கும் நூலை முதலாவ