பக்கம்:விளையும் பயிர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்முடைய நேரு

ஜவாஹர்லால் நேரு 1887-ஆம் வருஷம் பிறந்தவர். முதல் பிள்ளை, செல்லப்பிள்ளை. அவருக்கு என்ன குறைவு விளையாட்டுச் சாமானுக்குக் குறைவா? உடைக்குக் குறைவா? உணவுக்குக் குறைவா? ஒரு குறைவும் இல்லாமல் சந்தோஷமாக வளர்ந்து வந்தார். ஒரு நாள் குழந்தை ஜவாஹர் அப்பாவின் அறைக்குள் போனார். அப்பா எங்கேயோ வெளியிலே போயிருந்தார். மேஜை மேல் இரண்டு பெளண்டன் - பேனா இருப்பதைக் குழந்தை ஜவாஹர் பார்த்தார். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். அப்பா வெளி யிலிருந்து வந்தார். மேஜையைப் பார்த்தார். ஒரு பேனாவைக் காணவில்லை. அந்தக் காலத்தில் பெளண்டன் பேனா, சுலபமாகக் கிடைப்பதில்லை.

மோதிலால் நேரு மகா கோபக்காரர். "என் பேனா , எங்கே?' என்று இரைச்சல் - போட்டார். ஜவாஹர் ஒன்றும் பேசாமல் பேனாவை ஒளித்து வைத்துவிட்டார். கடைசியில் பேனாவை அப்பா கண்டுபிடித்தார். ஜவாஹர்மேல் கடுமையான கோபம் வந்தது. அவரை இழுத்து வந்து அடித்தார். செல்லப்பிள்ளையாக வளர்ந்தாலும், பாவம், பேனாவை ஒளித்ததற்காக அடிபட்டார்! பிறகு அவருடைய அம்மா வந்து அவரை அழைத்துப்போய்ச் சமாதானம் செய்தார். இது அவர் ஐந்து வயசுக் குழந்தையாக இருந்தபோது நடந்தது.

குழந்தைக்கு வீட்டிலே வாத்தியாரை வைத்துப் பாடம் சொல்லித் தந்தார்கள். அந்த வாத்தியார் மிகவும் நல்லவர். நல்ல கதைகளையெல்லாம் சொல்வார். குதிரை வீரர்களின் கதைகளைச் சொல்வார். அந்தக் கதைகளைக் கேட்கும்போதெல்லாம், நாமும் ஒரு குதிரை வீரன் ஆகவேண்டும்' என்று ஜவாஹருக்கு ஆசை ஏற்படும்.

பெரிய குதிரையின்மேல் டக் டக், டக் டக், டக் டக், டக் டக் என்று சவாரி பண்ணுவதாக நினைத்துக் கொள்வார். அவர்

15