பக்கம்:விளையும் பயிர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாளிகையில் வசித்தார்கள். அதற்கு ஆனந்த பவனம் என்று. பெயர். அதில் நீச்சம் அடிப்பதற்காக ஒரு குளம் இருக்கிறது. ஜவாஹர்லால் நேரு அதில் நீச்சம் அடிப்பார். அவருடைய தகப்ப னாருக்கு வேண்டியவர்கள் கூட அந்தக் குளத்துக்கு வந்து நீச்ச மடித்துப் பொழுது போக்குவார்கள். ஜவாஹர் அவர்களிடம் குறும்பு பண்ணுவார். அசந்து மறந்து நின்றால் தண்ணீருக்குள் தள்ளிவிடுவார். காலை இழுத்து விட்டுத் தண்ணீருக்குள் மூழ்கி மறைந்து போவார்.

அப்பா மோதிலால் நேரு வுக்குப் பல கனவான்கள் சிநே கம். அவர்களை அ டி க்க டி அழைத்து விருந்து நடத்து வார். அப்போதெல்லாம் வெள் ளைக்காரரைப்போல விருந்தில் மதுவை அருந்துவதுண்டு. ஒரு நாள் தகப்பனாரும் அவர் சிநே கிதர்களும் விருந்து உண்டு கொண்டிருந்தார்கள். ஜவாஹர் லால் மறைவாக நின்று பார்த்துக்கொண் டிருந்தார். அவரை மோதிலால் நேரு பார்த்துவிட்டார்.உடனே எடுத்துத் தம் மடியில் வைத்துக்கொண் டார். ஜவாஹருக்கு விஷமம் ஒன்றும் செய்ய முடியவில்லை. கண் களைக் கொட்டாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். கிண்ணங்களில் மேல்நாட்டு மதுவை ஊற்றி அவர்கள் உண்டார் கள்.அந்த மது செக்கச் செவேலென்று இருந்தது. ஜவாஹர் மெதுவாக நழுவினார். அம்மாவிடம் ஓடிப்போய், 'அம்மா! அம்மா! அப்பாவும் அவர் சிநேகிதர்களும் ரத்தத்தைக் குடிக்கிறார்கள்' என்று படபடப்புடன் சொன்னார். அவருக்கு அது மதுவென்று தெரியாது.

ஜவாஹருக்குப் பத்து வயசு நடந்தபோது அவருக்கு ஒரு தங்கை பிறந்தாள். குழந்தை பிறந்த செய்தியை ஜவாஹருக்கு


விளை. 3