பக்கம்:விளையும் பயிர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜேன் பாபு

'தூங்குமூஞ்சி' என்று யாராவது உங்களைச் சொன்னால் உங்க ளுக்கு எவ்வளவு கோபம் வரும்? சுறுசுறுப்பாக இருந் தால்தான் படிப்பு வரும்; வேலைகளை நன்றாகச் செய்யலாம். "ஒருவர் தூங்கு மூஞ்சியாக இருந்தார். ஆனால் அவர் படிப்பிலே புலி' என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். அது எப்படி? தூங்குமூஞ்சிக்கும் படிப்புக்கும் வெகுதூரமாயிற்றே! என்று தான் சொல்லுவீர்கள். உண்மையில் அப்படி ஒருவர் இருக்கிறார், நம்முடைய பாரத தேசமாகிய குடியரசுக்கு இப்போது தலைவராக இருப்பவர் ராஜேந்திரப் பிரசாத் என்பது உங்களுக்குத் தெரியுமே. இதே ராஜேன்பாபு சின்ன வயசில் தூக்கத்திலே அதிகப் பிரியம் உள்ளவராக இருந்தாராம்; ஆனால் படிப்பிலே எல்லோரையும் விடக் கெட்டிக்காரர். அவர் எம்.ஏ., எம்.எல். என்ற பட்டங்களை எல்லாம் வாங்கியிருக்கிறார். அவர் தூங்குமூஞ்சியாகவே இருந்து, எப்படிக் கெட்டிக்காரர் ஆனார்?' என்று தெரிந்துகொள்ள உங்க ளுக்கு ஆசையாக இருக்கிறதல்லவா? இதோ சொல்லுகிறேன்.

ராஜேன் பாபு சின்னக் குழந்தையாக இருந்தபோது எப்போது வீட்டில் விளக்கு ஏற்றுகிறார்கள் என்பதே அவருக்குத் தெரியாது. அதற்குள் தூங்கிப் போய்விடுவார். அவருடைய தகப்பனார் பெரிய ஜமீன்தார். ராஜேன் பாபுவுக்கு இரண்டு அண் ணன்மார், இரண்டு தமக்கைகள். இவரே கடைக்குட்டி சூரியன் மலைவாயில் விழவேண்டியதுதான். ராஜேன் பாபுவின் கண் இமை கள் மூடிக்கொள்ளும். அதற்கப்புறம் ராத்திரி என்ன நடந்தாலும் அவருக்குத் தெரியாது.

அவர்கள் வீட்டில் ஒரு வேலைக்கார அம்மாள் இருந்தாள். வேலைக்காரி ஆனாலும் சொந்தக்காரியைப்போலவே குடும்பத்தில் இருந்துவந்தாள். அவளை எல்லோரும் சித்தி என்று அழைப்பார் கள். அந்தச் சித்தி, குழந்தை ராஜேன் பாபுவிடம் மிகவும் பிரிய மாக இருப்பாள். அவர் தூங்கிப்போனாலும் எழுப்பிச் சாதம் போடுவாள். பாதித் தூக்கத்தோடே அவர் அவள் ஊட்டும் சாதத்தை ருசியே தெரியாமல் மடக்கு மடக்கென்று விழுங்குவார். நடுநடுவிலே தூங்கிவிழுவார். சித்தி, "இந்தா, அம்மாவுக்கு ஒரு பிடி அண்ணாவுக்கு ஒரு பிடி' என்று சொல்லி ஊட்டுவாள்.

30