பக்கம்:விளையும் பயிர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


கொண்டார். இங்கே வந்தவுடன் எல்லாம் சுலபமாக இருந்தன. அதோடு இவருடைய அறிவும் கூர்மையாக இருந்தது. அதுதான்

இதுமட்டும் அல்ல. நன்றாகப் படிக்கிறவராக இருந்தால், மற்றவருக்குப் பாடமும் சொல்வார்கள். தாம் பாடம் கேட்பதோடு கூடச் சிலருக்கு ஆஸாத் அந்தச் சிறு வயசிலேயே ஆசிரியராகவும் இருந்தார். இவருக்கு அப்போது வயசு பதினாலு. அவரிடம் பாடம் கேட்டவர்களில் தாடிக்காரப் பட்டாணியர் ஒருவர். அவருக்கு ஆஸாத்தின் அப்பா வயசு இருக்கும். அவர் ஆஸாதுக்கு மாணாக்கர்! வயசான பிறகு மூளையில் விஷயம் சுலபத்தில் ஏறுமா? அந்த மாணாக்கர் கொஞ்சம் நிதானமான பேர்வழி. தர்க்கத்தில் ஒரு பகுதியை ஆஸாத் அந்தப் பட்டாணியருக்குச் சொல்லித் தந்துகொண்டிருந்தார். ஒரு விஷயத்தை விளக்கினார். அவருக்கு அது விளங்கவில்லை. பல உதாரணங்களைச் சொல்லித் தொண்டைத் தண்ணீர் போக விரிவாகச் சொன்னார். அப்போதும் அது அந்தத் தாடிக்கார மாணாக்கர் மூளையில் ஏறவே இல்லை. ஆஸாதுக்குக் கோபம் வந்துவிட்டது. எவ்வளவு தடவைதான் சொல்லிக் கொடுப்பார்! புத்தகத்தை அவர் மூஞ்சியில் எறிந்தார். "ஓய் உமக்கு மூளை களிமண்ணால் செய்திருக்கிறது. அதில் இந்தப் படிப்பெல்லாம் ஏறாது பேசாமல் வீட்டுக்குப் போய் மாட்டோடு மாடாக இருந்து புல்லைத் தின்னும், அதற்குத்தான் லாயக்கு" என்று சொல்லி அனுப்பிவிட்டார். பாவம்! அந்த மனிதர் வாயையே திறக்கவில்லை. பதில் பேசமாத்திரம் அல்ல; சாப்பிட வாயைத் திறக்க வேண்டுமே! அதைக் கூட அவர் செய்யவில்லை. 'நாம் இப்படி இருக்கிறோமே!’ என்று வருந்தி அன்று சாப்பிடாமல் பட்டினியாகவே இருந்தார்.

இந்தச் சமாசாரம் ஆஸாதின் அப்பாவுக்குத் தெரிந்தது. தம் பிள்ளையின்மேல் அவருக்குக் கட்டுக்கு அடங்காத கோபம் வந்து விட்டது. "உனக்குக் கொஞ்சங்கூடப் புத்தி இல்லை. உன் வயசென்ன? அவர் வயசென்ன? அந்த மனிதர் மனசைப் புண்படுத்தி விட்டாயே! என் வயசான அவரிடம் மரியாதை இல்லாமல் நடக்கலாமா? அவர் பட்டினி கிடக்கிறாரே! போய் முதலில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவரைச் சாப்பிடும்படி செய்து விட்டு வா"

என்று கடிந்துகொண்டார்.


44