பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விளையும்பயிர் முளையிலே தெரியும் உலகப்புகழ் பெ ற்ற ஓவியக்கலைஞராகிய இரவிவர்மா ஒருநாள் வண்ணக் குழம்பில் தூரிகையைத் தோய்த்து ஒரு நாய்ப் படம் தீட்டிக்கொண்டிருந்தாராம். எல்லா உறுப்புகளும் எளிதில் தீட்டப்பட்டனவாம். ஆனால், நாயின் வாயிலிருந்து நுரை வருவதுபோல் தீட்டிப் பார்த்தாராம். அது இயற்கையாய் இருப்பதுபோல் அமையவில்லையாம். மேலும் சில முறை முயன்று பார்த் தாராம்-முடியவில்லையாம். உடனே எரிச்சல் கொண்டு தூரிகையை அந்த நாய்ப்படத்தின் முகத்தை நோக்கி எறிந்தாராம். பின்பு பார்த்தபோது, நாயின் வாயிலிருந்து இயற்கையாய் நுரை வருவது போல் காணப்பட்டதாம். இதை இரவிவர்மா எதிர்பார்க்கவேயில்லை. தற்செயலாய் இந்த அமைப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உலகில் தற்செயலாய் நிகழ்ந்தவற்றுள், ஆர்க்கிமிடீஸ் (Archimedes கி. மு. 287-கி. மு. 212) என்பவரின் கண்டுபிடிப்பும் ஒன்றாகும். பிறப்பு வளர்ப்பு ஆர்க்கிமிடீஸ் கிரேக்கத்தைச் சேர்ந்த சிசிலி என்னும் தீவில் உள்ள சைரக்யூஸ் என்னும் ஊரில் கி. மு. 287ஆம் ஆண்டு ஃபைடியஸ் என்னும் வானநூல் வல்லுநருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே இவரும் அறிவியல் ஆய்வில் ஆர்வம் கொண்டிருந்தார். அலெக்சாண்ட்ரியா என்னும் ஊரில் உள்ள புகழ் பெற்ற பள்ளியில் கல்வி பயின்றார். கணிதத்தைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றார்.