பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விளையும் பயிர் முளையிலே தெரியும் ஆய்வுகள் பாரடே முதல்முதலாக வேதியியல் ஆராய்ச்சி செய்தார். குளோரின் (Chlorine) என்னும் வாயுவையும், அது மற்ற பொருள்களுடன் சேர்ந்தால் உண்டாகும் கூட்டுப் பொருளையும் நன்றாக ஆராய்ந்தார். வாயுக் களைத் திரவமாக (நீர் வடிவாக) ஆக்கும் முறைகளை ஆராய்ந்து, அதில் வெற்றி பெற்றார். மற்றும், பாரடே, பென்சீன் (Benzene) என்னும் கரிமப் பொருளைக் கண்டுபிடித்தார். ஆய்வுகட்கிடையே இந்தக் கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்விலும் ஈடுபட்டார். அதாவது மின்சாரம் காணுமுன் சம்சாரம் கண்டார். பின்னர், மின்சாரம் கண்ட மேதை என்னும் புகழுக்கு உரிய மின்சார ஆராய்ச்சியைத் தொடங்கினார். மின்னோட்டத்திற்கும் காந்தப் புலத்திற்கும் இடையே உள்ள தொடர்பு அறிய வந்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் அயராது ஆய்வு செய்து, காந்தப் புலத்தால் மின்சாரத்தை உண்டாக்கலாம் என்னும் சிறந்த உண்மையை 1831ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ‘மின்காந்தக் கிளர்வு என்னும் இந்த விளைவின் அடிப்படையிலேயே இப்போது உலகம் மின்சாரம் பெற்றுப் பயனடைகிறது. தங்கமுலாம் பூசுவோர்க்கு உதவும் முறையினையும் ஆய்ந்து அறிவித்தார். பாரடே 1831ஆம் ஆண்டில், ஒரு சிறந்த அறிவியல் ஆய்வாளராக ஏற்கப்பட்டு இலண்டன் ராயல் கழகத்தில் உறுப்பினர் பதவி அளிக்கப் பெற்றார்.