பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந் தர். சண்முகனார் 33 இவருடைய எண்ணமெல்லாம் அறிவியல் ஆய்விலேயே இருந்தது. பின்னர் இவர், அம்பரி டேவிக்குத் தாம் எடுத்த குறிப்புகளை அனுப்பியும், தமே ஒரு மின்சார வேதியியல் ஆய்வு செய்திருப்பதாக எழுதியும், ஒரு வேலை தருமாறு கேட்டுக்கொண்டார். ராயல் கழகம் இவரது ஆர்வத்தை அறிந்த டேவி தமது ஆய்வுக் கூடத்தில் கண்ணாடிப் புட்டிகளைக் கழுவும் வேலையில் அமர்த்திக் கொண்டார். ராயல் கழகத்தில் இருந்த மற்ற ஆராய்ச்சியாளர்கட்கும் இட்ட வேலை செய்து நல்ல பெயர் எடுத்து அங்கே நிலையூன்றினார். 1813 ஆம் ஆண்டு டேவி திருமணம் செய்து கொண்டார். டேவி தம் மனைவியுடன் உலகச் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது பாரடேயும் உடன் சென்றார். இதனால், டேவியின் சொற்பொழிவுகளைக் கேட்கவும், செய்த ஆய்வுகளைக் காணவும் வாய்ப்பு பெற்றார். பல அறிஞர்களின் தொடர்பும் கிடைத்தது. இந்த வாய்ப்புகளை யெல்லாம் பெற்றதன் பயனாகப் பாரடே தாமே தனித்தும் ஆய்வு செய்யும் திறன் பெற்றார். மின்னால் பகுக்கும் முறை என்ற ஒரு விதியைக் கண்டுபிடித்தார். டேவி இறந்த பின் பாரடே டேவியின் ஆய்வைத் தொடர்ந்து செய்தார். நாளடைவில் அந்த ஆய்வுக் கூடத்தின் செயலாளர் பதவி பெற்றார்.