பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 37 豐 எழுத்துமாகிய கண்களை இவர் அளித்தார். இவரது பெயர் லூயிஸ் பிரேல் (Louis Braille) என்பது. பிறப்பு வளர்ப்பு இவர் 1809 பிப்ரவரி 22 ஆம் நாள் பாரிஸ் நகருக்கு அண்மையில் உள்ள கூப்ரே' (Coupvray) என்னும் ஊரில் பிறந்தார். குடும்பம் ஏழைக் குடும்பங் தான். உடன் பிறந்தவர்களுடன் ஒரு குடிசை வீட்டில் பிறந்து வாழ்ந்தார் லூயிஸ். இவர் இரண்டு கண்களும் தெரியாத குருடர். ஆனால் பிறவிக் குருடர் அல்லர் - மூன்றாம் அகவையில் தற்செயலாய் ஏற்பட்ட குருடரே. இவருடைய தந்தை ஒரு தொழிற்கூடம் நடத்தினார். தொழிற் கூடத்திற்குள்ளே தாம் இல்லாத நேரத்தில் யாரும் வரக்கூடாது எனக் கண்டிப்பான ஒரு விதி போட்டிருந்தார். 'சிறு கன்று அச்சம் அறியாது’ என்று சொல்வார்களே. அதற்கேற்ப, லூயிஸ் மூன்றாம் அகவையிலேயே, அப்பா இல்லாத நேரத்தில் தொழில் கூடத்தில் புகுந்து நோட்ட மிட்டார், அங்கே கிடந்த ஒரு கத்தியை எடுத்தார். 'இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் வாளா (சும்மா) இருக்க மாட்டா என்ற பழமொழிக்கு ஏற்ப லூயிஸ் கத்தியால் ஒரு தோலை வெட்டினார். எப்படியோ கத்தி ஒரு கண்ணிலே குத்திவிட்டது. கோல் எடுத்த பிள்ளை குருடு என்பார்கள். கத்தி எடுத்த