பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விளையும் பயிர் முளையிலே தெரியும் இல்லாமையால் கன்றாகவே எழுந்து செல்கிறது. யானை மிகவும் பெரிதாகவும் உயரமாகவும் இருப்பதாலும், அதனால் கீழே குனிந்து மற்ற விலங்குகள்போல் வாயால் உணவு கொள்ள முடியாததாலும் நீளமான தும்பிக்கை அமைந்துள்ளது. இதற்கு இயற்கையின் தேர்வு (Selection of Nature) 6T6ürg)|ib QLuff 57tull-GlåröT5. இவ்வாறு கூறியவரும் டார்வினே என்று சொல்லப் படுகிறார், டார்வினின் கருத்துகளைச் சிலர் ஒட்டியும் சிலர் வெட்டியும் சிலர் மாற்றியும், சிலர் புதுக்கியும் பல்வேறு கருத்துகள் தெரிவித்துள்ளனர். - குரங்கிலிருந்து குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்னும் தொடரைச் சிலர் மிகவும் எளிமையாகச் சொல்வதுண்டு. சிறுவன் ஒருவன் குரங்கு செய்வதுபோல் குறும்பு செய்வானேயானால், அவனைப் பார்த்த சிலர், குரங்கி லிருந்து பிறந்தவன் மனிதன் என்பது சரியாயிருக்கிறது; இந்தப் பையனுக்கு வால்தான் இல்லை - அறுந்தவால் என்று சொல்வதைக் கேட்கலாம். ஒருவாலும் இல்லாதிருக்கவும், மிகுதியாகக் குறும்பு செய்யும் பையனைப் பார்த்து, இவன் இரட்டைவால்’ என்றும், வாலை ஒட்ட நறுக்கி விடுவேன்’ என்றும், 'வாலைச் சுருட்டி மடக்கிக் கட்டிக்கொள் என்றும் மக்கள் கூறுவதையும் கேட்டு வருகிறோம்.