பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 47 இந்தியப் பெருநாட்டில் இராமாயணம் என்னும் ஒரு காப்பியக்கதை வழங்குகிறது. அதில், வாலுள்ள மனிதக் குரங்குப் படைகள், காப்பியத் தலைவனாகிய இராமன் தன் எதிரியாகிய இராவணனைக் கொன்று வெல்லத் துணை புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் குசராத் மாநிலத்தில் மனிதத் தாய் ஒருத்திக்கு வாலுடன் குழந்தை பிறந்ததாகவும் அந்த வால் நாளுக்கு நாள் வளர்ந்து வந்ததாகவும், அதைப் பின்னர் மருத்துவர் அறுவை செய்து அகற்றியதாகவும் செய்தித்தாளில் (1980 சூலை) வெளிவந்ததை உலகினருள் சிலராவது படித்து அறிந்திருக்கலாம். நமக்கும் வால் அவ்வளவு ஏன்? இப்போது உள்ள மாந்தர்க்கும் வால் (வால் போன்ற பகுதி) உள்ளது. அது வெளியில் வராமல் உள்ளேயே இருக்கிறது. இது மனிதத்தாயின் வயிற்றில் நன்கு தெரியும். இந்த வால் என்பது என்ன? மக்களின் முள்ளந் தண்டிலே பிட்டத்திற்கு (குண்டிக்கு) உரியதான 'இடுப்படி முட்டு முக்கோண எலும்பு உள்ளது. இதை ஆங்கிலத்தில் Sacrum (சேக்ரம்) என்பர். இந்தப் பகுதிக்கு முன்னால் உள்ள சிறு முள் எலும்புகளும் அவை சார்ந்த மற்ற திசுக்களும் (Tissues) அடங்கிய ஒரு தொகுதியே வால் எனப்படுகிறது. இது சுற்று முற்றும் தோலால் மூடப்பட்டிருக்கும். உடம்பில் மற்ற பாகங்களிலிருந்து பிரிந்து தனித்தும் நீள் வடிவிலும் இருக்கும். இது ஆங்கிலத்தில் “Coccyx' (காக்சிக்ஸ்) எனப்படும். 'காக்சிக்ஸ் என்றால் உள்வால் எலும்புப் பகுதி என்று