பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 53 முக்த் தேர்வில் (Interview) நாய்க்கடிக்கு மருந்து கண்டு பிடித்தவர் யார் என ஒரு கேள்வி கேட்கப்படுவதும் உண்டு. அந்த அளவுக்கு பாஸ்டருக்கு விளம்பரமும் பெரும் புகழும் கிடைத்தன. * பிறப்பு வளர்ப்பு பாஸ்டர் பிரான்சில் டால் என்னும் ஊரில் 1822-ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு போர் வீரர்; நெப்போலியன் படையில் சேர்ந்திருந்தார்; நெப்போலியன் தோல்வியடைந்த பிறகு தோல் பதம் செய்யும் தொழிற்சாலை அமைத்து நடத்தி வந்தார். அறிவியல் கல்வியோடு ஒவியக்கலையிலும் நல்ல பயிற்சி மிக்கவராக விளங்கினார் பாஸ்டர். ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராக வேண்டும் என்னும் விருப்பம் தூண்டிற்று. பாரிசில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் (Teacher's Training) Ġoeffó5] GjöpJÜ Lİ'__üb பெற்றார். முதலில் 1848ஆம் ஆண்டு டிஷான் நகரிலுள்ள ஒர் உயர் பள்ளியில் ஆசிரிய ரானார். பின் ஸ்ட்டிராஸ்பர்க் பல்கல்ைக் கழகத்தில் அறிவியல் ஆசிரியராகப் பணி புரிந்தார். புத்துயிர் படைப்பு பாஸ்டர் ஜூரா என்னும் இடத்திலுள்ள ஆர்பாய்ஸ் (Arbois) என்னும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அறிவியல் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். அமில ஆய்வு - படிக ஆய்வுகளில் ஈடுபட்டார். இதன் முடிவில் புதிய உயிர்களைப் படைக்க முடியும்.உண்டாக்க முடியும்