பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 59 கல்வி கற்றபின் செர்மனியில் உள்ள ஸ்ட்டிராஸ் பெர்க், க்ளீசன். ஒ கென்.கம் ஆகிய நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் பணியாற்றினார். 1885 ஆம் ஆண்டு வுர்ட்ஸ்பெர்க் நகரப் பல்கலைக் கழகத்தில் பெளதிகப் பேராசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டே ஆராய்ச்சிப் பணியில் அயராது ஓயாது ஈடுபட்டார். கண்டு பிடுப்பு ஒருநாள் ரென்ட்கென் ஒர் இருட்டறையில் தங்கிக் கொண்டு, காற்று நீக்கப்பட்ட ஒரு கண்ணாடிக் குழாயில் மின்சாரத்தைச் செலுத்தினார். அப்போது அந்த அறையின் அடுத்த பக்கத்தில் ஒளிவிடும் பொருளை நோக்கினார். கண்ணாடிக் குழாயில் மின்சாரத்தைப் பாய்ச்சினால்தான் அந்த ஒளி உண்டாகிறது-இல்லையேல் இல்லை. எதிர்மின் குழாயில் கண்ணுக்குத் தெரியாத கதிர்கள் இருப்பதாக உணர்ந்தார். . எதிர்மின் கதிர்களால் தாக்கப்படும் ஓரிடத்திலிருந்து கண்ணுக்குப் புலப்படாத ஒரு புதுவகைக் கதிர்கள் வெளியாவதைப் பார்த்தார். இதன் மறைபொருள் (இரகசியம்) அறிய முடியாமல் இருப்பதால், அந்தக் கதிருக்கு எக்ஸ்-கதிர்கள் (X-Rays) எனப் பெயர் வைத்தார். வெளிப்படையாகத் தெரியாத ஒன்றை x என்னும் எழுத்தால் குறிப்பிடுவது வழக்கம். Rays என்றால் கதிர்கள். இது தொடர்பாக மேலும் பல ஆய்வுகளைத் த்ொடர்ந்து செய்தார் ரென்ட்கென்; செய்து புகழ் ஏணியின் உச்சிக்குச் சென்றார். -