பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விளையும் பயிர் முளையிலே தெரியும் நாய் வளர்ப்பவர்கள் பழி பாவத்திற்கு அஞ்சிப் பொறுப்புடன் நடந்து கொள்ளல் வேண்டும். தெரு நாய்களின் தொல்லையிலிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பினை நகர மன்றங்கள் உணரவேண்டும். 9. அறியாக் கதிர் சில பொருள்கள் தற்செயலாய்க் கண்டு பிடித்தவர்க்கே இன்னதென்று சரியாக விளங்காமல் போவதுண்டு. அவ்வாறு விளங்காத ஒருவகைக் கதிர்களை ஒருவர் கண்டு பிடித்தார். அதைப் புரிந்து கொண்டு பெயர் வைக்க முடியவில்லை. அதனால் எக்ஸ்-ரே (X-Rays) கதிர்கள் என அக்கதிருக்குப் பெயர் சூட்டினார். இதைக் கண்டு பிடித்தவர் பெயர் வில்கெல்ம் கான்ராட் ரென்ட் Cl56ör (Wilhelm Konrad Roentgen) 6TsiruğTGíb. பிறப்பு வளர்ப்பு பிரஷ்யா நாட்டுக்காரரான ரென்ட்கென் லென்னப்பு என்னும் சிற்றுாரில் 1845 மார்ச் 27 ஆம் நாள் தோன்றினார். - - தந்தை செர்மானியர்-தாயார் ஆலந்து நாட்டார். இவரது தொடக்கக் கல்வி ஆலந்திலேயே கற்பிக்கப் பட்டது. மேற் கொண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிக் பல்கலைக்கழகத்தில் பெளதிகம் கற்றார். மின்திறம், ஒளி, வெப்பம் ஆகியவற்றில் இவருக்கு ஈடுபாடு இருந்தது.