பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விளையும் பயிர் முளையிலே தெரியும் இந்தத் தொழிலில் ஒரு நல்ல இடம் இவருக்குக் கிடைத்தது. எடிசன் பதினைந்தாவது வயதில் தந்தி நிலையத்தில் வேலைக்கு அமர்ந்தார். தாமே தந்தியை இயக்கும் அலுவலராக உயர்ந்தார். புதுவகைத் தந்தி முறையும் கண்டுபிடித்தார். ஆய்வு முயற்சிகள் இவர் வேறு எந்த வேலை செய்துகொண்டிருந்த போதும், அறிவியல் ஆய்வில் அடங்காப் பசி கொண்டி ருந்தார். எனவே அறிவியல் ஆய்வும் செய்து கொண்டிருந்தார். தமது இருபத்தோராம் வயதில், மின்சாரத்தின் துணையால் ஒலியைப் பதிய வைக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். இந்த ஆய்வின் பயனாக, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இயக்குபவர் இல்லாமலேயே கம்பியின் மூலம் செய்தியை அனுப்பும் வெற்றி கிடைத்தது. 1869 ஆம் ஆண்டு, முதலில் பதிவு செய்த ஒலியைத் திரும்பவும் வெளியில் கேட்கும்படி ஒலிக்கச் செய்யும் $56%mulé (Ticker tape machine) éðiðūlyāşTif. இந்த ஆய்வின் மூலம் பொறிகள் செய்யப்பட்டு விற்கப்பட்டதனால் 40,000 டாலர் பணம் ஈட்டினாராம். இந்தப் பணத்தைச் கொண்டு பெரிய நிலம் வாங்கினாரா மாடமாளிகை கூட கோபுரம் கட்டினாரா? இல்லை. இதை ஆய்வுக்கே செலவிட்டார். ஆய்வுக் கூடமும், தொழிற் சாலையும், கியூஜெர்சி, நியூயார்க் ஆகிய இடங்களில்