பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 71 செடியின் அடியில் போட்டுப் பார்த்தால், அது மிகவும் உயரமாக வளர்வதாகத் தெரிந்தால் நல்ல மருந்து என நம்பி, வேறு உயிர்கட்கு அதைப் பயன்படுத்துவர். செடி வளராததாகத் தெரியின் அந்த மருந்தைப் பயன்படுத்த மாட்டார்கள். இந்தக் கண்டுபிடிப்பால் சகதீச சந்திர போஸ் மிகவும் புகழ் பெற்றார். . இந்தப் போஸ் என்னும் மனிதப் பயிர் வளர்ந்த வரலாற்றைக் காண்போமா. பிறப்பு வளர்ப்பு சந்திரபோஸ் டாக்கா அருகிலுள்ள ராரிக்கல்’ என்னும் சிற்றுாரில் 1858 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் பிறந்தார். வங்காள தேசத்தில் உள்ள இந்தப் பகுதி அப்போது இந்தியாவோடு சேர்ந்திருந்தது. எனவே, போஸ் ஒர் இந்தியராவார். - போஸ் கல்கத்தாவில் புனித சேவியர் கல்லூரியில் பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று 1896 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். இந்த விளையும் பயிராகிய போஸ் முளையிலேயே அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டார். இவரது ஆய்வுப் பசிக்கு இவருடைய பேராசிரியராகிய லெ.பான்ட் என்னும் பாதிரியார் ஊட்டம் தந்து ஊக்கப்படுத்தினார்.