பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 29

ாலை நேரம். சாலையில் மக்கள் நடை D* சற்று குறைந்தே காணப்பட் டது. சாலையோரமாக அடர்ந்து படர்ந்த தூங்கு மூஞ்சி மரம் ஒன்று இருந்தது. பருத்து வளர்ந்தி ருந்த அம் மரத்தடியில் எப்போதும் நிழல் இருந்து கொண்டேயிருக்கும். அதனடியில் போ வோர் வருவோர் சற்று நேரம் தங்கி இளைப் பாறிச் செல்வர். அந்த மரத்தடிதான் இம்மாண நண்பர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசும் இடமாக இருந்து வந்தது. அம் மரத்தடி நிழலில் யாரை யோ எதிர்பார்த்தவாறு காளிமுத்து காத்திருந் தான். அவன் கையில் ஒரு பொட்டலம் இருந் தது. கெட்டித்தாளில் சுற்றப்பட்டிருந்ததால் அப்பொட்டலத்துள் இருப்பது என்ன என்பது தெரியவில்லை. இதைக் கண்ட முருகு அவனை நோக்கி வந்தான்.