பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 45

'சிங்காரத்துக்கு அது கைவந்த கலை. அவன் மாதிரியே எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்கிறான் போலிருக்கு' என்று கூறி அமை

தியானான்.

பொறாமை உணர்வோடு சிங்காரம் அறிவா னந்தம் மீது அபாண்டம் சுமத்திப் பேசியதைக் கேட்ட முருகு அவனுக்குச் சரியான மூக்கு டைப்புக் கொடுக்க எண்ணினான். அதற்குள் அறி வானந்தம் முந்திக்கொண்டு கண்ணியமான முறையில் பதில் தந்தது முருகுக்குப் போதியதா கப்படவில்லை. எனவே தொடர்ந்து முருகு தன் நண்பனை ஆதரிக்கும் வகையில் சிங்காரத்தை

நோக்கிக் கேட்டான்:

'அறிவானந்தத்துக்கு அவன் அம்மாவை விட்டா வேறு யார் இருக்காங்க? அவன் ஏன்'டா அவன் அம்மாவை ஏமாத்தனும்? அதுக்குத் தேவையே இல்லையே' என்று கூறியபடியே அறிவானந்தத்தை பார்த்துக் கேட்டான்:

"ஆமா, அறிவானந்தம் உன்னாலே எப்படி இவ்வளவு காசு சேர்க்க முடியுது?"