பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விழா தந்த விழிப்பு

தது. இதைப்பற்றி அறிவானந்தத்திடம் கேட்க வேண்டும் என்று எண்ணியபோதெல்லாம் ஏனோ, கேட்க இயலாமல் போய்விட்டது. அதற்கான சரி யான சந்தர்ப்பம் இப்போது வாய்க்கவே தன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள வினா வடிவில்

கேட்கலானான்.

முருகுவின் கேள்விக்கு அறிவானந்தம் பதில் சொல்வதற்கு முன்பாகவே சிங்காரம் பேச முற்பட்டான். அறிவானந்தத்தை மட்டம் தட்ட அதை நல்ல வாய்ப்பாகக் கருதினான். அறிவா னந்தத்தைப் பார்த்து ஒரு ஏளனப் பார்வை பார்த் தான். நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபடி பேசினான்:

'இது என்னடா கேள்வி? பாவம் அறிவா னந்தம் அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது. கடை களுக்குப் பலகாரம் போட்டு வாங்குகிற காசிலே கொஞ்சம் அப்படி இப்படி ஒதுக்கிட்டாப் போச்சு!"

சிங்காரத்தின் சொற்கள் அறிவானந்தத்தை வேதனைப்படுத்தின. அவன் பதிலுக்குப் பேசி னான்: