பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 விழா தந்த விழிப்பு

"பொறுத்திருந்து பாருங்கடா எப்படி என்று உங்களுக்கே புரியும் மிகுந்த வீராப் புடன் பேசினான். ஏதோ ஒருவித வெற்றிக் களிப் புடன் அவர்களைப் பார்த்தான்.

அவன் பார்வையும் பேச்சும் ஏதோ ஒரு விபரீதத்துக்கு ஆரம்பக் குறியாக முருகுக்குப்பட் டது. எதையும் ஆலோசிக்காமல் துணிந்து செய்யும் மனப்போக்கு சிங்காரத்துக்கு இயல் பான ஒன்று என்பது முருகுவுக்கு முன்பே தெரிந் ததுதான். அது அறிவானந்தத்துக்கு பாதகமாக அமைந்துவிடக் கூடாதே என்பதுதான் முருகு வுக்கு அப்போது இருந்த கவலை.

தன் நெருங்கிய நண்பன் சிங்காரத்தை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் காளிமுத்து பேசத் தொடங்கினான்:

“ஒரு வேளை சிங்காரம் வெற்றி பெற் றாலும் பெறலாம். யார் கண்டது? வழக்கம் போல் இந்த தடவையும் பேச்சுப் போட்டிக்குச் சிங்காரம் பேர் கொடுத்திருக்கிறான்னு நினைக் கிறேன்!"