பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 61

இப்படிப் பேசினால் சிங்காரம் மகிழ்ச்சி அடைவான் என்பது காளிமுத்துவின் கணக்கு. சிங்காரம்மீது நம்பிக்கை காட்டி காளிமுத்து பேசத் தொடங்கினான். அதைக் கண்டு சிங்கா ரத்தின் முகம் மலர்ந்தது. ஆனால், இத்தகைய நம்பிக்கை எதுவுமே முருகுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அவன் தன் அவநம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தினான்.

'சிங்காரமும் தான் எப்படியாவது, எதிலா வது பரிசு வாங்கணும்னு பார்க்கிறான், முடிய வில்லையே! பெயர் கொடுத்தால் மட்டும் போதுமா? அதுக்கான திறமை வேண்டாமா? இன்னும் சொல்லப் போனால் தான் பரிசு வாங்குவதைவிட, அறிவானந்தம் பரிசு வாங்கக் கூடாது. அதுதான் அவன் கவலை எல்லாம்.

இப்படி முருகு பேசிச் சென்றது சிங்காரத் துக்குப் பிடிக்கவில்லை. வெறுப்புடன் முகத் தைச் சுழித்துப் பேசத் தொடங்கினான்.

'ஏன்'டா ஒரேயடியா அறிவானந்தப் பாட் டுப் பாடறே, இந்தத் தடவை எப்படியும் பேச்சுப் போட்டியிலே முதற் பரிசு வாங்கிக் காட்டு றேனா இல்லையான்னு பாருங்கடா வர்றேன்.'