பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 விழா தந்த விழிப்பு

என்று வீராவேசத்துடன் கூறி, மிடுக்காக நடந் தான்.

அவன் அப்பால் நகர்ந்ததும் முருகு அவன் போக்கை விமர்சனம் செய்யலானான்.

"ஒவ்வொரு தடவையும் இந்தச் சவடா லுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. வெறும் வீறாப்பு, பரிசு வாங்குமா என்ன அதுக்குத் திற மையும் முயற்சியும் வேண்டும். சிங்காரத்திடம் பொறாமையும் ஆசையும்தானே இருக்கு?"

'அறிவானந்தம் ஒவ்வொரு ஆண்டும் தவ றாமல் பரிசு வாங்குறான். அதுக்கு அவன் தன்னை முழுமையாய் தயாராக்கிக்கிறான். நூல கத்திலிருந்து நிறைய நூல்களை எடுத்துப் படிக் கிறான். பொது அறிவை வளர்த்துக்கிறான். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் மூலம் தான் திறமையை வெளிப்படுத்தறான். பரிசு களைக் குவிக்கிறான். சிங்காரம் பாடப் புத்தகங்க ளையே ஒழுங்கா படிக்கிறது கிடையாது. இவன் எங்கே போட்டிலே கலந்து பரிசு வாங்குகிறது. சொல்ல முடியுமே தவிர சாதிக்க முடியாது. 'முருகு கூறிமுடிக்கும் முன் எதையோ நினைவு படுத்திக் கொண்டவனாக காளிமுத்து,