பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 விழா தந்த விழிப்பு

'தம்பி என்னைவிட உன் அம்மாவைக் காப்பாத்தினது நிதான்னு சொல்லணும். தக்க சம யத்திலே விலையுயர்ந்த மருந்துகளை வாங்கிக் கொடுத்தே. அதனாலே உன் அம்மா பிழைச்சுட் டாங்க. உன் முன்யோசனைத் தனமான சேமிப்பு விஷயம் என்னைப் புல்லரிக்க வைக்குது. உன்னைப் போல எல்ல மாணவர்களுக்கும் முன் யோசனையும் எதிர்கால நோக்கும் இருந்தால் போதும். நம்ம நாடு எதிர்காலத்திலே எவ்வ ளவோ முன்னேறிடும். ஆமா, அது என்ன கையிலே காகிதங்கள்? தேர்வுத் தாளா?"

டாக்டரிடம் காகிதங்களை நீட்டியபடியே அறிவானந்தன் கூறினான்:

'நாளைக்குப் பள்ளிக்கூடத்தில் சிறு சேமிப்பு விழா நடக்கப் போகுது. சார் அப் போது நடக்கும் பேச்சுப் போட்டியிலே கலந் துக்கப் பெயர் கொடுத்திருக்கேன், சார் அதுக் காகப் பேச வேண்டியதை ஒருமுறை எழுதிப் பார்த்தேன், சார்! ஆனால், அம்மா இருக்கிற இந்த நிலையிலே, நான் பேச்சுப் போட்டிக்குப் போய் கலந்துக்க முடியாது, சார்'

அறிவானந்தம் தன் தாய்மீது வைத்திருந்த பற்றும் பாசமும் டாக்டரை வெகுவாகக் கவர்ந்