பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 விழா தந்த விழிப்பு

திரும்ப வருவதில்லை. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சம்பாதிக்க இய லாத வயதான காலத்தில் சுகமாக வாழ இளமை யிலிருந்தே சேமிக்க வேண்டும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது பழமொழி.

'மனிதனைவிட குறைந்த அறிவு படைத்த உயிரினங்களெல்லாம் தவறாமல் சேமித்து வைத் துப் பயனடைகின்றன. மழைக் காலத்துக்கு வேண்டும் என்று வெயில் காலத்தில் இறையைத் தேடி சேமிக்கின்றது எறும்பு. அதேபோல் தேனி, தேனைச் சேர்த்து வைத்துப் பயனடைகின்றது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் சம்பாதிக்கும் காலத்தில், வருங்காலத்திற்கு வேண்டுமே எனச் சேமிப்பதில்லை. வருமானம் இல்லாத வயதான காலத்தில், தடி ஊன்றி தள்ளாடும் பருவத்தில் அமைதியோடும் மகிழ்ச் சியோடும் வாழ வழி இன்றி வருந்தி நிற்கிறான். எதிர்கால வாழ்வை எண்ணிப் பார்ப்பதில்லை. இளமையில் சேமிப்பு உணர்வு இருப்பதில்லை. ஆடம்பரமாக வாழ்ந்துவிட்டு முதிய வயதில் கையேந்தி பிச்சை கேட்கும் கேவல நிலைக்கு ஆளாகிறான். அந்த நிலை ஏற்படாமல் இருக்க நாமெல்லாம் இளம் வயதிலிருந்தே - இன்றுமு தலே சிறுகச் சிறுக சேமிக்க வேண்டும்.