பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 91

'இன்றையச் சேமிப்பே நாளையப் பாது காப்பு. வருங்கால நல்வாழ்வுக்கு வளமான அடிப் படை மாணவ மாணவிகள் அவ்வப்போது கைச் செலவுக்குக் கிடைக்கும் காசுகளுக்குக் கண்ட கண்ட பொருள்களையோ, தின்பண்டங்களை யோ வாங்கித் தின்று உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது! அவைகளைச் சேமித்து வைக்க முயல வேண்டும்!"

இப்பேச்சைக் கேட்டு மாணவர்கள் பல மாகக் கைதட்டினார்கள். ஆனால், அவனுடைய நண்பர்கட்கு ஒரே வியப்பு. ‘என்னடா இது அதி சயமா இருக்கு தனக்குத்தானே அறிவுரை சொல் லிக்கிறானா? இல்லே, திட்டிக்கிறானா? என கச முசவென்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண் டார்கள்.

சிங்காரத்தின் நெருங்கிய நண்பனான காளி முத்துவுக்கு இந்தப் பேச்ஷ்சை நம்பவே முடிய வில்லை. இவனுக்கு எப்படி'டா இப்படி எல் லாம் பேசத் தெரிந்தது' என மெல்லிய குரலில் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.

சிங்காரம் தொடர்ந்து பேசினான் :