"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்" திருக்குறள். 1 முன்னுரை வாழையடி வாழையாக வேளாண்மைத் தொழிலில் ஈடு பட்ட குடும்பத்தில் பிறந்தவர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். இவருடைய முன்னோர்கள் நன்செய்நிலங்களை மட்டும் பயிரிட்டனர். இவர் தரிசாகக் கிடந்த புன்செய் நிலங்களிலும் பயிர்களை உண்டாக்கினார். பழத்தோட்டக்கலையில் வல்லவராக விளங்கினார். ஒளவையார் அதியமானுக்கு வழங்கியதால் புகழ்பெற்ற நெல்லியைக் காய்க்க வைப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். எலுமிச்சை மரம் வைத்து வளர்ப்பதில் இவர் கைராசி உடைய வராகத் திகழ்ந்தார். இவருடைய ஊர் ஓமந்தூர். அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது திண்டிவனம் என்னும் நகரம். தம் பண்ணையிலிருந்து மாட்டு வண்டியில் திண்டிவனத்திற்குப் போனார். அங்குப் போய்ச் சேர்ந்ததும் ஒரு பெரியவரைப் பார்க்க விரும்பினார். பண்ணை யிலிருந்து எலுமிச்சம்பழம் கொண்டு வராததால், திண்டிவனம் சந்தைக்குள் நுழைந்து விலைக்கு எலுமிச்சம்பழம் வாங்கினார். அப்போது கூடைக்காரிக்கும் இவருக்கும் நடந்த உரையாடல் இது : ஓமந்தூரார் : 4 எலுமிச்சம்பழம் கொடம்மா, என்னம்மா விலை? கூடைக்காரி: பழம் 10 காசு சாமி.
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/22
Appearance