உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓமந்தூரார்: 5 காசு என்று கொடு அம்மா. கூடைக்காரி : 5 காசுக்கு வேண்டுமானால் அதற்கு வேறு எலுமிச்சம்பழம் இருக்கு, தாரேன். இந்தக் கூடையில் இருக்கிறது, நல்ல பழம்; நிறமானது; சாறு ரொம்பப் பிழியலாம்; பம்பாய் மெட்ராசுக்கு எல்லாம் லாரி லாரியா போவுது. சாறு பிழிந்து பாட்டல் பாட்டலா சீமைக்கு விக்கிறாங்க; திண்டிவனம் பஜார் பூராவும் விசாரிச்சுப் பாரு, பெரியவரே; ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தோட்டத்துப் பழம்னு கேளு. ஒருத்தரும் 10 பைசாவுக்குக் குறஞ்சு தர மாட்டாங்க. இது பேரம் பண்ணுகிற சரக்கு இல்லை. யார் இந்த ஓமந்தூரார்? பொது வாழ்வில் ஈடுபடுவோர் மூவகையினர். சுயநலமி, அரசியல்வாதி, நாட்டை உருவாக்கும் சான்றோர். சுயநலமி, தன் குடும்பத்துக்குப் பணம் சேர்ப்பதிலும், தன் உறவினர்களுக்கு வேலை கொடுப்பதிலும், தன் புகழைப் பரப்புவ திலும், தனக்குச் சிலைகள் முதலியன வைத்துக் கொள்ளுவதிலும், தனக்குப் பிறகு தன் உறவினர்களை அரியாசனத்தில் அமர்த்து வதிலும் கவனம் செலுத்துவான். அரசியல்வாதி அடுத்த தேர்தலில் தானும் தன் கட்சியும் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை நிறைவேற்ற எதையும் துணிந்து செய்வான். நாட்டை உருவாக்கும் சான்றோர்கள் (Statesmien) அடுத்த தலைமுறையினரைப் பற்றியும் நாட்டு நலனைப்பற்றியும் மட்டுமே சிந்திப்பார்கள். ஓமந்தூரார் மூன்றாவது வகையினர். மனைவி இறந்தபோது இவர் கவலைப்படவில்லை. "இவனுக்கு இந்த அளவில் இல்வாழ்க்கை போதும் என்பது இறைவனின் ஆணை' என்று கருதினார். மறுமணம் செய்துகொள்ள இசையவில்லை. 99 2