உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன் மாணவர்கள் இப்பள்ளியில் ஓமந்தூராருடன் படித்தவர்களில் இருவரைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒழுக்கத்தாலும் ஞானத்தாலும் சிறந்து விளங்கி உலகெல் லாம் புகழ்பெற்றிருக்கும் தவமுனிவர் காஞ்சி காமகோடி பீடம் 68ஆவது பீடாதிபதி ஸ்ரீ ஜெகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்கள், பூர்வஆஸ்ரமத்தில் திண்டிவனத்துக்கு அடுத்த விழுப்புரத்தில், சுவாமிநாதன் என்ற பெயரில் அவதரித்தார்கள். அவர்கள் ரெட்டியாருக்கு எட்டு மாதம் மூத்தவர்கள். திண்டிவனத்தில் படித்துக்கொண்டிருந்த போது அதாவது 1907 பிப்ரவரி 13இல் அவர்கள் காமகோடி பீடத்தில் அதிபதியானார்கள். சென்னையில் தென்னிந்திய கல்வி அறக்கட்டளை (எஸ்.ஐ.இ.டி.) நிறுவி, மகளிர் கல்லூரி நடத்தி வருபவரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமாகிய திரு. பஷீர் அகமதுசாயீத், மற்றொருவர் ஆவார். இவ்விரு பெருமக்களும் ஒமந்தூராருடன் திண்டிவனத்தில் படித்தனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆச்சாரிய சுவாமிகள் திண்டிவனத்தில் முகாம் போட்டிருந்தபோது அவர்களுக்கு பெரிய வரவேற்புக் கொடுக்க ஓமந்தூரார் முன்னின்று எல்லா ஏற்பாடு களையும் கவனித்தார். 1960-ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் சங்கர ஜெயந்தி நடைபெற்றதை அறிந்து வடலூரிலிருந்து சிறு நன்கொடை அனுப்பினார். தந்தையார் மறைவு திண்டிவனத்தில் ஓமந்தூரார் மூன்று ஆண்டுகள்கூட முழுமையாகப் படித்து முடியவில்லை. தந்தையார் இறந்து விட்டார். 'தகப்பனோடு சுல்வி போகும்' என்ற பழமொழி பலித்துவிட்டது. மூத்த மகனான காரணத்தால் குடும்பத் தலைவராகி விட்ட ஓமந்தூரார் அப்பொறுப்பு ஏற்று விவசாயத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். 9