உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் படிப்பு ஓமந்தூராரின் சிறிய தந்தையார் கிளியனூர் சின்னசாமி ரெட்டியார் என்பவர். தந்தையார் இறந்த பிறகு இவரே ஓமந்தூராருடைய வாழ்க்கையைப் பெரிதும் உருவாக்கினார். இவர் அக்காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார். சென்னையில் திருவல்லிக்கேணிப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந் தார். ஓமந்தூராரை அந்த வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்து, இந்து உயர்நிலைப்பள்ளியில் படிக்கவைத்தார். தாயார் கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல்' இல்' என்றார் இளங்கோவடிகள். மூத்த மகனாகிய இராமசாமி ரெட்டியார் உடனே திருமணம் செய்துகொண்டு, ஓமந்தூரிலேயே தங்கி, குடும்பப் பொறுப்புக்களை மீண்டும் கவனிக்கவேண்டுமென்று இவர் தாயார் விரும்பினார். சின்னசாமி ரெட்டியார் அக்கருத்துக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் அவரால் அதைத் தடுக்க முடிய வில்லை. எனவே ஓராண்டு மட்டும் படித்த பிறகு இராமசாமி ரெட்டியார் ஓமந்தூருக்குத் திரும்பினார். தாயாரிடத்தில் ஓமந்தூராருக்கு இருந்த பக்தி சொல்லி முடியாது. தாயார் அரங்கநாயகி அம்மாள் பள்ளியில் படித்தவர் இல்லை. பட்டங்கள் பெற்றவரும் இல்லை. அக்காலத்துக்கு ஏற்றவாறு தெய்வபக்தி நிறைந்தவராகவும், பிறருடைய துயரங் களைக் காணச்சகிக்காதவராகவும், நல்ல பழக்கவழக்க ஒழுக்கங்கள் உடையவராகவும், கடமையுணர்ச்சி மிக்கவராகவும் இருந்தார். 'தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை' என்பர். மேலே குறிப்பிட்ட இயல்புகள் தாயாரிடமிருந்து இவருக்கு அமைந்தன. இளமையில் பெற்ற பயிற்சி இவருடைய வாழ்க்கைப் பாதையைச் செம்மையாக அமைத்தது. தாயாரிடம் இவர் கொண்டிருந்த பற்று, அந்த அம்மையார் நினைவாக இவர் தமது முதுமைக்காலத்தில் வெளிவரச் செய்த நூல்களிலிருந்து தெரிய வரும். அரங்கநாயகி அம்மாள் 1913 அளவில் இறந்துவிட்டார். ஓமந்தூராரின் வாழ்க்கையில் வீசிய முதல் புயல் இதுவே. பிற்காலத்தில் சான்றோன் என்று தமிழ் மக்கள் பாராட்டக் கூடிய ஒரு மகனை உலகுக்கு வழங்கினோம் என்று அமைதியோடு அரங்கநாயகி அம்மரள் உயிர்நீத்தார். 10