உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தப்பா கிளியனூர் சின்னசாமி ரெட்டியார், ஓமந்தூராரின் சித்தப்பா என்பதையும் அவர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந் தார் என்பதையும் முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். பிஞ்சிளம் வயதிலேயே ஓமந்தூராரின் நெஞ்சில் கல்வியில் ஆர்வமும் பொதுப்பணியில் ஈடுபாடும் முளைவிடக் காரணமாக இருந்தவர் சின்னசாமி ரெட்டியார்தான். கிளியனூர் என்னும் ஊர் திண்டிவனம் - புதுச்சேரிச் சாலையிலுள்ளது. மருத வளம் மிக்க ஊர் இது. இவ்வூர்ச் சிவன்கோயிலிலுள்ள பல கல்வெட்டுக்கள் இவ்வூரின் பெருமையைக் குறிப்பிடுகின்றன. ரெட்டியார் சமூகத்தினர் இவ்வூரில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் ஓமத்தூராரின் உறவினர் ஆவர். பிரெஞ்சு ஆட்சியில் இருந்த புதுச்சேரி சுதந்தர இந்தியாவுடன் இணைவதற்குக் காரணமாக இருந்தவரும் தமிழ்நாடு சுதந்தரக் கட்சியின் தலைவராக இருந்தவருமான கே.எஸ்.வேங்கடகிருஷ்ண ரெட்டியார் இவ்யூரினர். அவரும் ஓமந்தூராரின் உறவினரே ஆவார். சின்னசாமி ரெட்டியார் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அப்பகுதியில் அளவுகடந்த செல்வாக்குப் பெற்றிருந்தார். செல்வாக்கு என்பது பெரும்பாலும் செல்வத்தோடு சேர்ந்தது தான். அந்நாளில் செல்வம் என்பது வேளாண்மைச் செல்வமே. நிலபுலன்கள் ஏராளமாக இருந்ததால் வளமான வருமானத்தைப் பெற்றுவந்த சின்னசாமி ரெட்டியார், அந்தப் பணம் ஊருணி நீர்போலப் பலருக்கும் பயன்படச் செய்தார். கிளியனூரில் வெள்ளம் ஏற்பட்டுப் பெரிய அளவில் சேதம் உண்டாயிற்று. அப்போது அந்த ஊர்மக்கள் 3,000 பேருக்கும் கோடி (சலவை செய்யாத) வேட்டி அல்லது சேலையை அன்பளித்தார். சின்னசாமி ரெட்டியார் காலத்தில் சென்னையிலிருந்து திண்டிவனம் வரைதான் இரயில்பாதை போடப்பட்டிருந்தது. சென்னையில் பதவி வகித்த ஆங்கிலேய அதிகாரிகள் புதுச்சேரியைப் பார்க்க விரும்பினால் சின்னசாமி ரெட்டியாருடைய உதவியை எதிர்பார்ப்பார்கள். திண்டிவனம் வரையில் அந்த 11