உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" வெள்ளைக்காரர்கள் இரயிலில் வருவார்கள். அங்கிருந்து புதுச்சேரிக்கு கிளியனூர் வழியாக அவர்கள் குதிரைச் சவாரி செய்வார்கள், அல்லது குதிரை வண்டிகளில் செல்லுவர். இரண்டு வகை ஏற்பாடுகளில் எதுவாகயிருந்தாலும் அதைச் செய்யக் கூடியவர் சின்னசாமி ரெட்டியார் ஒருவரே ஆவார். திண்டிவனத் திலிருந்து புதுச்சேரிவரை ஒரே குதிரையில் செல்வதும் இயலாது. மாற்றுக் குதிரைகளில்தான் செல்லவேண்டும். தமது குதிரை களையும் மற்றவர்களுடைய குதிரைகளையும் வழங்கி, சின்னசாமி ரெட்டியார் அதிகாரிகளுக்கு வேண்டிய பயண ஏற்பாடுகளைச் செய்துவந்தார். ஜமாபந்தி நடத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சின்னசாமி ரெட்டியாருடைய செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கிளியனூரிலேயே ஜமாபந்திகள் நடத்தி வந்தனர். ஒவ்வொரு தடவையும் ஜமாபந்தி 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை நிகழும். அதற்காக அக்காலத்தில் சின்னசாமி ரெட்டியார் ஆண்டுதோறும் 5,000 ரூபாய் வரை செலவுசெய்து வந்தார். அப்போது 8 கிராம் எடையுள்ள தங்கப் பவுன் 8 ரூபாய் விலைக்கு வந்தது. இப்போது (1979இல்) 1200 ரூபாய் விலைக்கு விற்பனையாகிறது என்பதை நம் நினைவில் கொள்ளத்தக்கது. பொதுப்பணிகள் பலவற்றில் சித்தப்பா சின்னசாமி ரெட்டியார் ஈடுபட்டுச் செல்வாக்கும் புகழும் பெற்றுவந்ததை இளமையிலேயே உடனிருந்து உன்னிப்பாகக் கவனித்துவந்த இராமசாமி ரெட்டியார், தாமும் பொது வாழ்க்கையில் பங்கு கொள்ள வேண்டும் என்று விழைந்தார். அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு, மனைவியும் மகனும் இறந்தமை யால் மிக வேகமாக இவருக்கு. உண்டாயிற்று. படிப்பினை சித்தப்பா சின்னசாமி ரெட்டியார் பொதுப்பணிகளில் அளவுகடந்த பணத்தை வாரி இரைத்துவிட்டதால் பிற்காலத்தில் அவருடைய குடும்பம் ஓரளவு வறுமையால் ஓமந்தூரார் இதை நன்றாக உணர்ந்து, ஒரு படிப்பினையாகக் வாடிற்று. கொண்டார். 'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகிக்கெடும்' என்பதை உணர்ந்தார். தன்னுடைய அன்றாட வாழ்வில் மிகச் சிக்கனமாக நடந்து வந்தார். இதைப்பற்றிய விவரங்களைப் பின்னர் கூறுவோம். 12