உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வியள்' எனச் சிலப்பதிகாரம் கூறும் குணநலன்களைப் பெற்றிருந்த மனைவி இறந்தவுடனேயே தன்னுடைய வீட்டை விட்டு ஓ.பி.ஆர். வெளியேறினார். ஊரின் எல்லையில் சாலைக்கு மறுபுறத்தில் தென்னந்தோப்புக்குள் ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு அங்கேயே இருந்து வரலாயினார். தனக்கும் தன்னைக் காண வருபவர்களுக்கும் உணவு ஆக்க சமையல்காரன் ஒருவனை ஏற்பாடு செய்து கொண்டார். மனைவி இறந்த நாள் முதல் அவர் எந்தப் பெண்ணையும் பார்த்ததுகூட இல்லை. பதவி காரணமாகச் சில பெண்கள் அவரைக் காண வந்தபோதும் அவர் நாணினார், அஞ்சினார், வெறுத்தார். அந்த ஆசிரமத்தைச் சுற்றியிருந்த புன்செய் நிலங்களைப் பயிர் செய்வதிலும் அந்த வருவாயைப் பொதுப்பணிகளுக்குச் செலவிடுவதிலும் தன் வாழ்க்கையைக் கழித்தார். தம்பிமார் ஓமந்தூராரின் தம்பிமார் இருவர். ஒருவர் முத்துக்குமரப்ப ரெட்டியார்; இவர் இளமையிலேயே இறந்துவிட்டார். இவருடைய மகனாகிய ஒ. எம். வெங்கட்டராம ரெட்டியார், இப்போது ஓமந்தூரில் கிராம மணியக்காரராகப் பணிபுரிந்து வருகிறார். மற்றொருதம்பி லெட்சுமிநாராயண ரெட்டியார். இவரைப் பற்றி, இந்நூலில் பிற இடங்களிலும் குறிப்பிடுவோம். இவரும் ஓமந்தூராரும் வாழ்க்கை முறைகளில் வெவ்வேறு கருத்துடையவர் களாக இருந்தும் அண்ணனிடம் தம்பி மிகுந்த மரியாதை வைத்தி ருந்தார். இவர்கள் இருவருக்குமிடையே ஒன்றரை வயதுதான் வேறுபாடு. எனினும், அண்ணனுக்கு அருகே சென்று லெட்சுமிநாராயண ரெட்டியார் பேசமாட்டார். திண்ணை ஓரமாக நின்றுதான் பேசுவார். தன்னுடைய குடும்ப விவகாரங்களிலும் எந்த அளவு அண்ணனுக்குக் கட்டுப்பட்டு லெட்சுமிநாராயண ரெட்டியார் நடந்துகொண்டார் என்பது ஓ. பி. ஆர். சிறையில் இருந்தபோது லெட்சுமிநாராயண ரெட்டியார் அவருக்கு எழுதிய பின்வரும் கடிதத்திலிருந்து தெரியவரும். சென்ற தலைமுறையில் ஒற்றுமை யாக இருந்த இந்து குடும்பங்களில் நிலவிய பழக்கவழக்கங்களை யும் இதிலிருந்து அறிந்துகொள்ளலாம். 14