உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓ.பி.ஆர். சிறையிலிருந்தபோது அவருக்கு அவர் தம்பி லெட்சுமிநாராயண ரெட்டியார் 25-4 -1942-இல் எழுதியது: "சிரஞ்சீவி வெங்கடராமன் கல்யாண விஷயம் அதிக நிர்பந்தமாக இருக்கிறது. கல்யாணம் இந்த வருஷம் நடத்திவிடலாமா, தெரிவிக்கக் கோருகிறேன். ராதாபுரம் பங்காரு ரெட்டியார், கீழ்யிருசிப்பட்டு சுந்தர ரெட்டியார் பெண்கள் ருதுவாகி இருக்கிறது. தவிர கோழிப்பாக்கம் வெங்கிடசாமிரெட்டியார் பெண்இருக்கிறது. ராமனுபுரம் பெரியவர் பெண் ஒன்று இருக்கிறது. இதுகளில் எது உசிதம் என்று தெரிவிக்கிறீர்களோ அதன்படி நடந்து கொள்கிறேன். சிறையில் இருந்த ரெட்டியாரைப் போய்ப் பார்க்கக்கூட தம்பி லெட்சுமி நாராயணன் அஞ்சுவார். "தங்களை வந்து பார்க்கப் பெர்மிஷன் இருந்தால், தெரிவித்தால் வருகிறேன் என்று எழுதியிருக்கிறார். சிறைச்சாலை அதிகாரிகளுடைய இசைவைப் பெறுவதைவிட அண்ணனின் இசைவைப் பெறுவது கடினமாக இருக்கும். உறவினர்கள் ஓமந்தூரார் உறவினர்கள் மணப்புத்தூரிலும், திருவாமூரி லும் இன்றும் வாழ்கின்றனர். இந்த உறவினர் வீடுகளுக்கு இவர் இளமையில் அடிக்கடி சென்றுவந்தார். மணப்புத்தூர் என்பது மணம்தவிர்த்தபுத்தூர் என்ற சொற்றொடரின் சிதைவு. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இவ்வூரில் திருமணம் நிகழ்வதாக இருந்தது. ஆனால் அந்தத் திருமணம் நடைபெற விடாமல் இறைவனால் தவிர்க்கப்பட்டது.. தேவார நாயன்மாராகிய இவர் தொடர்புள்ள இந்த ஊரில் உள்ள தம் உறவினர் வீடுகளுக்கு அடிக்கடி சென்றதால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் அவரிடம் ஈடுபாடு காட்டவும் ஓமந்தூராருக்கு வாய்ப்புக்கள் கிடைத்தன. இதனால் சுந்தரர் தேவாரத்தை நெஞ்சுருகப் பாடினார்; தன் மகனுக்குச் சுந்தரம் என்று பெயரிட்டார். ஓமந்தூராரின் உறவினர்கள் இன்றளவும் வாழ்ந்துவரும் மற்றொரு ஊர்,அப்பர் என்றும் திருநாவுக்கரசர் என்றும் போற்றப் 15